புதன், 23 ஆகஸ்ட், 2017

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை


ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் உதவி மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்க வரும் 30 ஆம் தேதி கடைசி தேதி என்பதால் விண்ணப்பிக்காத பட்டதாரிகள் விண்ணப்பித்து பயனடையலாம்.

பணி: ASSISTANT SUPERVISOR

காலியிடங்கள்: 85

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கணினி படிப்பில் ஓராண்டு டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கணினி தொடர்புடைய பணியில் குறைந்த பட்சம் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 33 வயதுக்குள் இருக்க வேண்டும் (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு).

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000/- விண்ணப்பக் கட்டணத்தை Air India Engineering Services Limited என்ற பெயரில் டி.டி. எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்பவேண்டும் (முன்னாள் ராணுவத்தினர் & எஸ்ஸி., எஸ்டி பிரிவினருக்குக் கட்டணம் இல்லை)

விண்ணப்பிக்கும் முறை: http://www.airindia.com/careers.htm என்ற இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தின்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Air India Engineering Services Limited
NORTHERN REGION
PERSONNEL DEPARTMENT
A320 AVIONICS COMPLEX
IGI AIRPORT, Terminal-II
(NEAR NEW CUSTOM HOUSE)
NEW DELHI-110037.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் திறனறி தேர்வுகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு: http://www.airindia.com/writereaddata/Portal/career/501_1_AMENDMENT%202%20FOR%20THE%20POST%20OF%20ASSTT%20SUPERVISOR.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 30.8.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக